Tuesday, 25 February 2014

நான்கு படங்கள் நடித்ததும்

நான்கு படங்கள் நடித்ததும் நார்த்திலிருந்து வரும் நடிகைகளுக்கு வரும் ஆசை, சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும்.


 பெரும்பாலும் இந்த ஆசை அவர்கள் சினிமாவிலிருந்து ரிட்டையர்ட் ஆகும்வரை கதிமோட்சம் கிடைக்காமல் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். ஹன்சிகாவையும் தற்போது அந்த ஆசை பீடித்துள்ளது.


தோல்வி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா இப்போது சக்சஸ்ஃபுல் ஹீரோயின். தமிழும், தெலுங்குமாக பத்து படகள் கைவசம் உள்ளது. ஆனால் இதுவரை சொந்தக்குரலில் இவர் டப்பிங் பேசியதில்லை.


இந்த வருடம் போகட்டும். அடுத்த வருடத்திலிருந்து சொந்தக் குரலில் டப்பிங் பேசுவேன் என சபதம் செய்துள்ளார். அதற்காக தமிழில் பயிற்சி எடுத்து வருகிறாராம்.


அழகான சில நடிகைகளுக்கு குரல் மட்டும் தகரத்தில் செய்ததாக இருக்கும். ஆனால் ஹன்சிகாவுக்கு ஆளைப்போலவே விஸ்கியில் முக்கிய ஹஸ்கி வாய்ஸ்.


ஒரு வருஷம் ஆகட்டுமே... கேட்க காத்திருக்கோம்.